ஒல்லிப்பிச்சான்னு கிண்டல் பண்றாங்களா? கவலையை விடுங்க, உடம்பை ஏத்தறது சப்பை மேட்டருங்க. இத மனசுல வச்சுக்குங்க விரைவில் வெயிட்டாயிடுவீங்க
கடையில கண்ணாடி பாட்டிலில் அடைந்து கிடக்கும் முறுக்கு, தேன்மிட்டாய், கடலைமிட்டாய், தேங்காய் மிட்டாய் கேக், போன்றவற்றுக்கு சுதந்திரம் கொடுங்க. தீனியை நொறுக்கி தள்ளுங்க . கோழி குடும்பத்தையே குளோஸ் பண்ணுங்க. அதாங்க கோழி இறைச்சி(தோலுடன்) மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை விட்டுவைக்கக்கூடாது. எண்ணெயில போட்டு வறுத்த உணவுகளை வாயில போட்டு வறுத்தெடுங்க.
வேர்க்கடலை, வெண்ணை, நெய், உருளைக்கிழங்கை நல்லா ஜம்முன்னு சாப்பிடுங்க. கும்முன்னு ஆயிடுவீங்க. பர்த்டே பார்ட்டினா சாக்லெட், கேக், ஐஸ்கிரீம் கிடைச்சா கபளீகரம் செஞ்சிடுங்க. முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை வயித்துல நிரப்புங்க. நைட் லேட்டா சாப்பிடுங்க, சாப்பிட்டுட்டு நல்லா குறட்டை விட்டு துõங்குங்க. காலையில் டிபனுக்கு நோ சொல்லிட்டு, வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யுங்க. டான்ஸ் ஆடாதீங்க. ஸ்விம்மிங், சைக்கிளிங் பண்ணாதீங்க. எதுக்காகவும் வருத்தப்படாதீங்க. சந்தோஷமா இருந்தால் ஹார்மோன் செயல்பாடுகளை ஊக்குவித்து அனிருத் மாதிரி இருந்தாலும் இமான் மாதிரி ஆக்கிவிட்டுரும். ஒல்லியாக பிறந்தது சாபமில்லங்க. தீனி முதல் சாப்பாடு வரை வெளுத்து வாங்க கடவுள் கொடுத்த வரமுங்க.