உடல் எடையை குறைக்க சிறந்த 8 வழிகள் weight loss in tamil,weight loss tips tamil,udal edai kuraiya,tips for tamil fat loss, tips to reduce weight in tamil,vayiru kuraiya,yoga weight loss tamil,tamil fat loss,weight loss foods tamil, udal kuraiya,udal edai kuriya tips,udal paruman kuraiya,udal edai athikarikka, quick weight loss tips tamil,fat loss tips in tamil,fat loss tips tamil,thoppai kuraiya,

வெயிட்டை குறைக்க 8 தீர்மானம் போடுங்க
முயற்சி என்பது நாம் முதலில் எடுத்து வைக்கும் அடியில் தொடங்கிவிடுகிறது என்பார்கள்.  அதுபோல, உடம்பை/எடையை குறைக்க வேண்டும் என்றால் முதலில் மனதுக்குள் சங்கக்கூட்டத்தை கூட்டி தீர்மானம் போடுங்கள். அதென்ன தீர்மானம்ன்றீங்களா..இதாங்க...




முதலில்  வாட்டர் தான் ஸ்டார்ட்டர். தினமும் 8 கிளாஸ் தண்ணி குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு குடித்தால் உணவு அளவு குறைந்து, உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் நீங்க உதவும். செரிமானத்துக்கு வழிவகுக்கும்.

மூச்சு பயிற்சி செய்றீங்களா? காலையில பிரணாயாமம் செய்யுங்க. ஒரு நாள் பயிற்சி எடுத்துகிட்டா போதும். வீட்டுலேயே செய்யலாம். நுரையீரல் சுருங்கி விரிந்தால், அதிகளவு உடலுக்கு பிராணவாயு கிடைக்கும்போது, <உடல் இயக்கம் சுறுசுறுப்படைந்து கொழுப்பு இலகுவாகும்.

உடற்பயிற்சி மூணாவது. வாரம் 5 நாளாவது எக்சர்சைஸ் செய்யணும்னு முடிவெடுத்துடுங்க. நீங்க தண்டாள துõக்குவீங்களோ அல்லது யோகாசனம் செய்வீங்களோ ஆனா..ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் 30 நிமிடங்கள் வீதம் 5 நாள் செஞ்சிடுங்க

எதை சாப்பிடலாம்னு தெரிஞ்சுக்குங்க..வண்டி எவ்வளவு மைலேஜ் தருகிறது என்று பார்த்து வாங்க தெரியுது. மின்சார மீட்டர் ரீடிங் வேகமா  சுத்துனா கிறுகிறுன்னு தலை சுத்துது. ஆனா கலோரி கணக்கு மட்டும் வரமாட்டேங்குது. பசிக்குதுன்னு ஒரே ஒரு கேக்கும், ஒரு பாக்கெட் பிஸ்கட்டும் தான் சாப்பிட்டேன்னு அப்பாவி முகம் காட்டாதீங்க. அதுல அரைநாளுக்கு தேவையான கலோரியை முழுங்கியிருப்பீங்க. கலோரியை விழுங்கிறது ஈஸி, செலவிடுறது ரொம்ப கஷ்டம். மைண்ட் இட்.

பசித்து புசி. அதாவது நல்லா பசி எடுத்தால் தான் சாப்பிடணும்னு இந்த பழமொழி சொல்லுது. பக்கத்துல இருக்கிறவனுக்கு கேட்காம பத்துகாசு தரமாட்டோம்ல? அப்புறம் வயித்துக்கு மட்டும் ஏன் கேட்காமலே ஜாங்கிரி, ஐஸ்கிரீம்னு அள்ளி வீசுறீங்க. கேட்காம வயித்துக்கு கொடுத்தா..அது கொழுப்பா திருப்பி கொடுத்துடும்.

அளவு தெரிஞ்சுக்கணும். மதியம் எவ்வளவு சாப்பிட்டோம்..அப்படியானால் இரவில் இவ்வளவு போதும்னு சாப்பாட்டை குறைக்க பழகணும். பொதுவாகவே நாம் தலைகீழாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காலையில் சாப்பிட்ட அளவை விட குறைவாக மதியமும், அதை விட குறைவாக இரவும் சாப்பிட வேண்டுமாம். நீங்க எப்படி?

மனசே ரிலாக்சே. கோபம் அதிகமாக இருந்தா கன்னாபின்னான்னு சாப்பிடாதீங்க. கிட்டத்தட்ட உங்களுக்கு நீங்களே ஆயிரம் கசையடி தந்துகிறது மாதிரி இது. பிரச்னைகளுக்கு மனதை ரிலாக்ஸ் செய்வது தான் வழியே தவிர, உணவு அல்ல. அது பிரச்னையை அதிகப்படுத்திவிடும்.

நான் குண்டு என்று யோசிக்ககூடாது. குழந்தை கொழுக் மொழுக்குன்னு இருந்தா எல்லோருக்கும் பிடிக்குது. ஆனா பெரியவங்க அப்படி இருந்தா முகம் சுளிக்கிறாங்க. இதென்ன நியாயம்ன்றீங்களா? என்ன பண்றது? ஆனா ஒன்னு. நான் இப்படி குண்டா இருக்கிறேனேன்னு எப்போ பார்த்தாலும் நினைக்காதீங்க. ஒல்லியாகிற திட்டத்தை தொடங்கி வெற்றி(நடை) போடறேன்னு அதுலயும் பாசிட்டிவ்வாக வாக்கிங் பற்றி நினைங்க..