கெட்ட கொழுப்புக்கு கெட் அவுட் | பவர்புல் பழங்களின் பட்டியல் | udal edai kuraiya tips weight loss in tamil,weight loss tips tamil,udal edai kuraiya,tips for tamil fat loss, tips to reduce weight in tamil,vayiru kuraiya,yoga weight loss tamil,tamil fat loss,weight loss foods tamil, udal kuraiya,udal edai kuriya tips,udal paruman kuraiya,udal edai athikarikka, quick weight loss tips tamil,fat loss tips in tamil,fat loss tips tamil,thoppai kuraiya,


உடல் கொழுப்பை குறைக்க பிரம்மபிரயத்தனம் எடுக்கிறீங்களா? எதுக்கு கஷ்டப்படுறீங்க? ஜாலியா பழம் சாப்பிட்டுகிட்டே கரைக்கலாம். அட சத்தியமா அது சாத்தியமுங்க. ஆனா ஒரு கண்டீஷன். காலை உணவாக சாப்பிடணும். என்ன பழம்னு கேட்காம தொடர்ந்து படிங்க..




 சிட்ரிக் அமிலம் நிறைந்த பழங்கள் அல்லது வைட்டமின் சி நிறைந்த பழங்களை காலை உணவாக வயிற்றில் நிரப்பினால் கொழுப்பை கரைக்கும் டியூட்டியை அது பார்த்துக்கொள்ளுமாம். அதுக்கு நான் எங்கபோவேன்னு முழிக்காதீங்க.
எல்லாம் உங்களுக்கு பழக்கப்பட்ட பழங்கள் தான். காலையில தக்காளி, பிளம்ஸ், பப்பாளி, மாதுளை, மாம்பழம், சப்போட்டாவை பிரேக்பாஸ்டா சாப்பிடுங்க. டெய்லி இதையே சாப்பிட்டா போரடிக்குமே என்று அலுத்துக்கொண்டால் இதையும் லிஸ்டுல சேர்த்துக்குங்க
திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு, ஸ்டிராபெர்ரி, அன்னாசிபழம்(பைனாப்பிள்), வாழைப்பழங்கள் ஆகியவற்றையும் சாப்பிடலாம்.

 இவற்றில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் அதிகளவில் இருக்கு. மேலும் காலையில் எப்பேர்ப்பட்ட உணவையும் எரிக்கும் ஆற்றலில் இருக்கும் வயிற்றுக்கு இத்தகைய சத்தான அதே சமயம் எளிதில் ஜீரணிக்கக்கூடிய பழங்களை கொடுத்தால், சத்துக்களை எடுத்துக்கொண்டு உடலை திடகாத்திரமாக வைக்கும் அதே நேரத்தில், கொழுப்பையும் கரைத்துவிடுமாம்.
உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, கெட்ட  கொழுப்பை  கெட்அவுட் சொல்வதில் பழங்கள் தாங்க பவர்புல்!