உங்கள் உடம்பில் நோய் இருக்கிறதா சிறுநீரில் நீங்களே கண்டுபிடிக்கலாம்


உடலுக்குள் செல்லும் நீரும், வெளியேறும் நீரும் தான் ஆரோக்கியத்தின் கண்ணாடி என்பார்கள். இதற்கேற்ப நாம் குடிக்கும் நீரின் சுத்தத்தை பொறுத்துதான் ஆரோக்கியம் தீர்மானிக்கப்படுகிறது. ஏனெனில் 85% நோய்கள் சுகாதாரமற்ற குடிநீரால் தான் ஏற்படுகிறது. அதேப் போல வெளியேறும் சிறுநீர் சொல்லிவிடும் உங்கள் உடல்நலத்தை. இது தொடர்பாக சித்தர்களின் எளிய டெக்னிக் ஒன்று உள்ளது.




நுõறு ஆண்டுகள்வாழ 200 ஆலோசனைகள் என்ற நுõலில் இந்த டெக்னிக் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது. காலையில் எழுந்தவுடன் வெளியேறும் சிறுநீரை கண்ணாடி பாத்திரத்தில் பிடித்து, அதில் 2 சொட்டு நல்லெண்ணையை விட்டால் உங்களின் உடல்நலம் தெரிந்துவிடும். எண்ணெய்துளி பாம்பு போல வளைந்தால் உங்கள் உடம்பில் வாதம். மோதிரம் போல வட்டமானால் பித்தம்,முத்துப்போல நின்றால் கபம், அதே நேரம் எண்ணெய் வேகமாக பரவினால் 
விரைவில் குணமாகும் என்றும் அது சிதறினாலோ, அமிழ்ந்துவிட்டாலோ நோய் குணமாகாது அல்லது கட்டுப்படுத்த முடியாது என்று தெரிந்துகொள்ளலாம். வாதம், பித்தம், கபம் ஆகிய நோய்களின் 3 மூலாதாரங்களை வைத்து உடல்நலத்தை கண்டறியும் சித்தர்களின் இந்த ஐடியா மருத்துவ உலகம் தொட்டிராத சிகரத்தின் உச்சாணி கொம்பு என்பது மறுப்பதற்கில்லை!