வெயிட் குறைக்க...எதை செய்யலாம். எதை செய்யக்கூடாதுன்னு பலருக்கும் தெரிவதில்லை. அது தெரிஞ்சுக்ணுட்டா..உடம்பு குறைக்கிறது மேட்டரே இல்லீங்க.உடம்பை குறைக்கணும்னு மனசு வச்சிட்டங்கன்னா..அதோட இந்த டிப்ஸையும் மனசுல வச்சுக்குங்க.
என்ன செய்யக் கூடாது : நொறுக்கு தீனி, எண்ணெயில் பொறித்த வகைகள், ஸ்வீட், பேக்கரி, வெண்ணை சமாச்சாரங்கள், ஆட்டிறைச்சி, முட்டை மஞ்சள் கரு இதெல்லாம் சாப்பிடக்கூடாது.
அதேப்போல நைட் பால் குடிக்கவே கூடாது. மாம்பழம், ரஸ்தாளி, பலாப்பழம், கிழங்கு, தேங்காய், ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். சாக்லேட், ஐஸ்கிரீம், பிரியாணி போன்றவற்றுக்கு குட்பை சொல்லிடுங்க. உட்கார்ந்தே இருக்காதீங்க.
என்ன செய்யலாம் : தினமும் 5 கப் காய்கறி/பழம் சாப்பிடணும். பீன்ஸ், அவரை, புடலை, பூசணி, சுரக்காய், கீரைகளுடன், சீசனில் கிடைக்கும் பழங்கள் சாப்பிடலாம். பப்பாளிக்காயையும், முள்ளங்கியையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
வாழைத்தண்டு/பூசணி/அருகம்புல் ஆகிய மூன்று சாறுகளில் ஏதாவது ஒன்றை குடித்து வரலாம். மேலும் பிரேக்பாஸ்டுக்கு முன்பாக ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டி சுடுநீரை குடிக்க வேண்டும். இத்துடன் 30 நிமிடங்கள் நடந்தால் போதும். ஒரிரு மாதங்களில் ரிசல்ட் தெரியும்.