படிங்க நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்!
ஒபிசிட்டி..இப்போ சிட்டியை தாண்டி கிராமத்துலயும் பெரிய பிரச்னையா உருவெடுத்திருக்கு. உடம்பை குறைக்க பல வழிகள் தெரியவந்தாலும் அனைத்தையும் சரியா நினைவுல வச்சுக்க முடியலன்னு வருத்தப்படுறீங்களா? விடுங்க கவலையை! ஈஸியா நினைவில் வைத்துக்கொள்ளும் விதமாக உடல் எடையை குறைப்பதற்கான 12 வழிகளை புதுமொழியாக சொல்றோம். நோட் இட்.
1.ஸ்நாக்(ஸ்) உடல் எடை எனும் விஷத்தை ஏத்தும் ஸ்நேக்!
2.சால்ட் வெயிட்ட ஏத்துறதில் கிரேட்
3.நாலு கிலோ மீட்டர் நடந்தா நுõலுபோல ஆயிடும் இடுப்பு
4.ஆயுளுக்கு ஆப்பு வைக்கிறதுல ஆயில் தான் அப்பாடக்கர்
5.ஸ்வீட் எடு. (வெயிட் குறைக்க) திண்டாடு.
6.மட்டன், மசாலா, மாம்பழம். மூணு மா’லயும் கவனம்மா
7.குக்கர்ல வீணாகுதுன்னு வயித்துல கொட்டாத. அது மக்கராயிடும்
8.மோர் குடிச்சா உனக்கு ஆயுள் மோர்(ஆங்கிலத்தில் அதிகம்).
9.ஒயிட்டாயிட்டா கர்வப்படாதே. வெயிட்டாயிட்டா கவலப்படாதே.
10.சோத்துல கொழுப்ப குறைச்சா., ஹெல்துல செலவ குறைக்கலாம்.
11.பசிச்சா சாப்பிடு. சொக்குனா துõங்கிடு. தொப்புன்னு விழுந்துடும் தொப்பை.
12.உடம்பு சைஸா இருக்கணும்னா தேவை எக்சர்சைஸ்!
எஸ். முத்துக்குமார். திருச்சி.