உணவும் மருந்தும் அளவை மீறினால் எப்படி விஷம் என்று கருதப்படுகிறதோ அதுபோலத்தான் உடற்பயிற்சியும். உடலை சரியாக முறையாக உரிய அளவுடன் பராமரிப்பதுதான் உடற்பயிற்சி. உலகில் பரிந்துரைக்கப்படும் பெரும்பாலான உடற்பயிற்சிகள் 26 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு தான். மற்ற வயதுக்காரர்கள் தங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்னரே உடற்பயிற்சி செய்வது நல்லது. சரி 26 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் எந்த உடற்பயிற்சியை எந்த அளவில் செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.
1. டிரெட் மில்லில் நடக்கிறீர்கள் என்றால் 15 நிமிடங்களும், பின்னர் 2 நிமிடம் இன்டர்வெல் எடுத்து மீண்டும் 15 நிமிடங்கள் செய்யலாம்.
2. வெளியில் சைக்கிள் ஓட்டுகிறீர்கள் என்றால் தொடர்ந்து 30 நிமிடம்
3. ஏரோபிக் உடற்பயிற்சி என்றால் 35 நிமிடங்கள் செய்யலாம். பின்னர் ஐந்து நிமிடங்கள் உடலையும், மனதையும் அமைதியாக வைத்துக்கொள்ளணும்
4. நீச்சல் பயிற்சி செய்கிறீர்கள் என்றால் சாதாரண நீரில் 45 நிமிடங்கள் மற்றும் சுடுநீரில் 30 நிமிடங்கள் தான் அதிகபட்சம்.
5. 35 முதல் 45 நிமிடம் நடைபயிற்சி செய்யலாம். ஆனால் முடிவில் அஞ்சு நிமிடம் மூச்சுப்பயிற்சி கட்டாயம்
6. அதேப்போல 30 நிமிடம் நடந்தபிறகு, ஐந்து புல்அப்ஸ் செய்யவேண்டும். இல்லையென்றால் தேர்ந்தெடுத்த சில யோகாசனங்களை 15 நிமிடங்கள் செய்யலாம்.
7. விளையாட்டு பயிற்சி என்றால் அது ஒவ்வொன்றுக்கும் மாறுபடும்.
பேட்மிட்டன், டென்னிஸ். டேபிள் டென்னிஸ், வாலிபால், கால்பந்து, போன்ற விளையாட்டுக்களை ஒரு மணிநேரம் முதல் 3.5 மணி நேரம் வரை ஆடலாம்.
8. படிகட்டுகளில் ஏறி இறங்குகிறீர்களா..தினமும் 150 படிகள் வீதம் 30 நிமிடங்கள் ஏறி இறங்கலாம். எனினும் 50 வயதானவர்களின் மூட்டு நிலையை கருத்தில் கொண்டு படிகளை கணக்கிடுங்கள். ஆரோக்கியத்தை விட்டுக்கொடுத்து என்றுமே ஆரோக்கியம் கிடைக்காது.