ஒரு டீ தினமும் குடித்தால் போதும். கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உங்கள் உடல் எடை குறைந்துவிடும் என்றால் நம்பமுடிகிறதா.
ஆனால் அதுதான் உண்மை. அதென்ன டீ..த்ரி ரோசஸ் ஆ, சக்ரா கோல்டான்னு கேட்காதீங்க. அதுதான் கிரீன் டீ. ஆமா நிறைய பேர் இப்போ சொல்றாங்க. அதுல அப்படி என்ன பயன்னு கேட்பதற்கு பதிலாக..படித்து குடித்துவிட்டு சொல்லுங்க.
நம் உடல் உப்புவதற்கு அதிகப்படியான நீர் சேர்வதும் ஒரு காரணம். அதை கிரீன் டீ வெளியேற்றி குறைக்கிறது. கிரீன் டீயில் கேடிசென்ஸ் என்ற வேதிப்பொருள் இருப்பதால் உடலின் உஷ்ணத்தை உயர்த்தி, கொழுப்பை கரைக்ணுன்றன. மேலும் உடலில் கார்போ ஹைட்ரேட்டை மந்தமாக செயல்பட வைப்பதால் இன்சுலின் அளவு குறைந்து,
குளுக்கோஸ் கொழுப்பாக மாறும் அளவு குறைக்கப்பட்டு எதிரொலியாக உடல் எடை குறைகிறது. முக்கியமாக கிரீன் டீ குடிப்பதால் பசி உணர்வு குறைகிறது. இதனால் சாப்பாட்டின் அளவு குறைந்து அதன்மூலமாக உடல் இளைக்கிறது.
இதைத்தவிர பல நோய்களை கட்டுப்படுத்தும் வல்லமையும் கிரீன் டீக்கு உண்டு. கேன்சர் வளராமலும், இதய நோய் வராமலும் தடுக்கும் இது, சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. முகப்பரு மற்றும் முக சுருக்கங்களை தடுப்பதோடு, முதுமை அடைவதை தடுத்து, இளமையுடன் இருக்க செய்கிறது. குடல் தொடர்பான பிரச்னைகள் மற்றும் சிறுநீரகம்/கல்லீரல் போன்றவற்றை பாதுகாக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து சுறுசுறுப்புக்கு வழிகாட்டுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக செரிமானத்துக்கு வழிகாட்டுவதால் உடலில் தேவையற்ற கொழுப்பு/வாயுக்கள் தங்காமல் பார்த்துக்கொள்கிறது. வெளியில தான் சாப்பிடணும்னு இல்ல.
இப்பல்லாம் கிரீன் டீ வீட்டிலேயே தயாரிக்கும் வகையில் சூப்பர் மார்கெட்களில் பொருட்கள் வந்துடுச்சு. படிச்சிட்டு எப்படியிருக்ண்ன்னு சொல்றதை விட குடிச்சிட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க பாஸ்!