வயிறு மற்றும் இடுப்பு பகுதியை சுற்றி சைக்கிள் டியூப் சுற்றினாப்புல சதை இருக்குதா? கங்கிராட்ஸ்! நீங்க வருத்தப்பட வேண்டிய வாலிபர் சங்கத்துல சேர்ந்துட்டீங்க. உடற்பருமன் எனும் நோய் உங்களுக்கு வந்துவிட்டது. ஐயையோன்னு பயப்படாதீங்க. கொழுப்பை குறைக்க எட்டு ஐடியா இருக்கும்போது ஏன் வொர்ரி?
1. காலையில வயித்துக்கு லீவு கொடுத்தீங்கன்னா...உங்க ஆரோக்கியத்தை அது காவு வாங்கிடும். உலகமே அழிஞ்சாலும் காலையில சாப்பிட தவறாதீங்க. மார்னிங் வயித்த காலியா போட்டா, அது எக்ஸ்ட்ரா பேட்டா கேட்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்து கடைசியில எக்ஸ்டிராவா வாங்கி கொழுப்பை உண்டு பண்ணிடும்.
2. ஸ் - களுக்கு முழுக்கு போடுங்க : நுõடுல்ஸ், ஓட்ஸ், கெல்லாக்ஸ் போன்ற ஸ்களுக்கு பதிலாக நம்நாட்டு பாரம்பரிய உணவு வகைகளான சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்குங்க. இல்லையா...பூண்டு, வெங்காயம், இஞ்சி, இலவங்கப்பட்டை, மிளகு, கோஸ், கடுகு, கிராம்பு , போன்றவற்றை காலையில் சாப்பிட கொழுப்பு ஜகா வாங்கிடும். தேனுடன் லெமன் சாறு கலந்து காலையில குடித்தால் உடல் எடை தொபக்கடீர் தான்.
3. தாகம்னா என்னான்னு தெரியுமா : சிலபேருக்கு தாகம் வந்தாலே உடனே மிரண்டா கேட்குது. இது எப்படி இருக்குன்னா...சிபியு பேன்ல காத்து வாங்குற மாதிரி இருக்கு. இன்னும் சிலருக்கோ தாகம் எடுக்கிறது என்பது கூட தெரிவதில்லை. அதையும் பசி என்று நினைத்துக்கொண்டு மொடா தீனி தின்று விட்டு, இடுப்பளவை ஐந்துஎக்ஸ்எல்களாக உயர்த்திக்கொள்கிறார்கள். வயிற்றில் எப்போதும் 50 சதவீதம் தான் உணவு இருக்க வேண்டும். மீதமுள்ள இடங்களில் காற்றும், நீரும் தலா 25 % சதவீதம் இருக்க வேண்டும். அப்போதுதான் ஜீரணத்துக்கு உதவும். மேலும் நாள் ஒன்றுக்கு 3 முதல் 7 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. நீர் அதிகம் அருந்த ரத்த அழுத்தமும் குறையும்.
4. ஒழுங்கா சாப்பிடுங்க : சரியா சாப்பிட்டாலே உடலில் உள்ள கொழுப்பை ஈஸியா குறைச்சிடலாம். உணவில் நார்ச்சத்துள்ள பொருட்களையும், ஊட்டச்சத்து கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்களையும் அதிகம் சேர்க்கணும். துரித உணவுகள், எண்ணெய் பலகாரங்கள், ஸ்வீட்களை தவிர்த்தால் கொழுப்பு தவிடுபொடிதான்.
5. என்ன செய்யலாம் எக்சர்சைஸ் ? அஞ்சு கிலோ மீட்டர் நடப்பதும் ஒரு கிலோ மீட்டர் ஓடுவதும் ஒரே பலனைத்தான் தரும். அதேப்போல 30 நிமிடங்கள் ஜிம்மில் மெனக்கெடுவதும், ஒரு மணிநேரம் சைக்கிள் ஓட்டுவதும் ஒரே பலன்தான். வாரம் நாலு நாள் 30 நிமிடம் நீந்துவதும், தினமும் 1 மணிநேரம் ஷட்டில் காக் விளையாடுவதும் ஒன்னுதான். 15 நிமிடம் ஸ்கிப்பிங் செய்வதும், அரை மணிநேரம் டான்ஸ் ஓடுவதும் கூட ஒன்னுதான். தங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற வகையில் உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுத்து செய்யும்போது அழகாக நேர்த்தியாக உடம்பு ஆகிவிடும்.
6. எட்டுமணிநேரம் துõங்குங்க : நிறைய துõங்கினாலும் ஆபத்து. குறைவா துõங்கினா பேராபத்துன்றாங்க உடற்பருமன் குறித்து டாக்டர்கள். குறிப்பாக ஆறுமணிநேரத்துக்கும் குறைவாக துõங்குகிறவர்கள் உடற்பருமனாகிவிடுவதாக மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.
7. சிக்குன்னு உடம்புக்கு உதவும் சி : சோடியம் உப்புக்கு பதிலாக பொட்டாஷியம் மற்றும் எலுமிச்சை உப்பு போன்றவற்றை பயன்படுத்தலாம். உப்பை குறைப்பதே நல்லது. அதிலும் சோடியம் குறைக்கப்பட வேண்டிய ஒன்று. இதுஒருபுறமிருக்க வைட்டமின் சி சார்ந்த உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும். கொழுப்பை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற வேதிப்பொருளை சுரக்க செய்யும் வைட்டமின் சி, மன அழுத்தத்தால் சுரக்கும் கார்டிசாலையும்(வயிறு கொழுப்பை உருவாக்கக்கூடியது) கட்டுப்படுத்துகிறது.
8. சர்க்கரைக்கு ரிடையர்ட்மெண்ட் : உணவில், பானங்களில் சர்க்கரையை பயன்படுத்துவதை பெருமளவு கட்டுப்படுத்துங்க. பயபுள்ள ரொம்ப நாளா நம்மள குண்டாக்குறதுல வேல செஞ்சிட்டான். ரிடையர்மெண்ட் குடுத்துடுவோம். அதுக்கு பதிலா தேன், பனங்கற்கண்டு, அதிமதுர சாறு ஆகியவற்றை அப்பாய்ட்மெண்ட் பண்ணிடுங்க