டயட் கிடையாது உடற்பயிற்சி வேண்டாம் ஈஸியா உடம்ப குறைக்கலாம் வாங்க

அஞ்சு கிலோ மீட்டர் நடை, அரைமணிநேரம் ஜிம், நாள் முழுவதும் டயட், சைக்கிளிங், ஏரோபிக்ஸ், யோகா, என பல முறைகளை கையாண்டு உடற்பருமனை குறைப்பதில் டயர்டாகி கிடக்கிறீங்களா. அப்ப இந்த மேட்டர் உங்களுக்குத்தாங்க.


உடற்பருமன் உள்ளவர்களில் 99 சதவீதம் பேர் புலம்பும் ஒரே புலம்பல் இதுதான். உலகத்துலேயே கஷ்டமான வேலை  உடம்ப குறைக்கிறதுதான். உடல் எடையை குறிப்பாக தொப்பையை குறைக்கிறது அவ்வளவு கஷ்டமா என்ன? இல்லவே இல்லை. கண்டிப்புடன் வளர்க்கப்படும் பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருப்பதைபோல, கண்டிப்பான நிபந்தனைகளை பின்பற்றினால் எந்த உடற்பயிற்சியும், மிக அதிக சாப்பாட்டு கட்டுப்பாடுகள் இன்றி ஈஸியா உடம்பை குறைக்கலாம். புலம்பாம பொறுமையா படிங்க
உணவு : காலையில் மகாராஜாவை போலவும், மதியம் இளவரசனை போலவும், இரவில் ஆண்டியை போலவும் உண் என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதுபோல காலையில் நன்றாக சாப்பிடுங்கள்.

 காலை உணவை தவிர்க்க கூடாது. மதியம் வரை வாய் பேசுவதற்கும், தண்ணீர் குடிப்பதற்கும் மட்டும்தான். மதியம் நல்ல சாப்பாடு, கோழி மற்றும் மீன், கீரை பச்சை காய்கறிகள் என சோற்றை குறைத்து சாப்பிடுங்கள்.
அதன்பின் இரவு வரை வாய்க்குள் வெற்றிலை பாக்கை தவிர வேறு எதையும் அனுமதிக்காதீர்கள். இரவில் எண்ணெய் இல்லாத 2 அல்லது 3 சப்பாத்தி/ரொட்டி சாப்பிடுங்கள். அவ்வளவுதான்.
மூன்று வேளை உணவை தவிர நொறுக்கு தீனி அது இதுன்னு வாயை சவுபாக்கியா வெட்கிரைண்டரை போல ஆட்டிக்கிட்டே இருக்கக்கூடாது.

குடிப்பது : எப்போதும் இனிமே தண்ணீர், சர்க்கரை குறைவான லெமன் ஜூஸ் மற்றும் கிரீன் டீ மட்டும்தான். மத்தபடி, சூடான பானம் முதல் பெப்சி கோலா வரை அனைத்துக்கும் தடை போட்டுருங்க

உடற்பயிற்சி வேண்டாம் : தனியாக ஜிம்முக்கோ ஏரோபிக்ஸ் பயிற்சியோ செய்ய வேண்டாம். பாவம் கஷ்டப்பட்டுக்காதீங்க. ஆனா ஒரு கண்டீஷன்.

மார்கெட் போகணும்னா, 200 மீட்டர் துõரத்தில வண்டியை பார்க் பண்ணிட்டு நடந்துபோங்க. ஷாப்பிங் போனா படிகளில் ஏறுங்க. வேலையே இல்லாவிட்டாலும் படி ஏறுவதை பிடித்து செய்யுங்க.
மாசத்துல ஆயிரம் படி ஏறிட்டா அரை கிலோ குறையுதுன்றத நினைச்சுக்குங்க.

வீட்டு வேலை : வீட்டை நன்றாக குனிந்து பெருக்குங்கள். தோட்ட வேலைகளை ஈடுபாடு காட்டுங்கள். குறிப்பாக களை பிடுங்குதல், செடி நடுதல், சுத்தப்படுத்துதல் போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் இது நல்ல பயிற்சி.