ஆயிரம் நன்மைகளை அள்ளிவழங்கும் தியானம் மெடிட்டேஷன் செய்தால் மெடிக்கல் பில்லே இல்ல

உலகில் உள்ள ஜீவராசிகளில் மனிதனால் மட்டுமே தியானம் (மெடிட்டேஷன்) செய்ய முடியும். ஏனெனில் அவனால் மட்டுமே தன் மனத்தை கட்டுப்படுத்த முடியும். அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தவே தியானம் செய்கிறோம். இதனால் மனம் சாந்தி அடைவதாக பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் அதன் பயன்கள் அளவிட முடியாதவை. தியானம் செய்வதால் உடல் ஆரோக்கியத்துக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றன என்பதை தெரிந்துகொண்டால் தியானத்தை நாளை முதல் நீங்கள் தொடங்கிவிடுவீர்கள்.




கோபம் குறையும் ; தியானம் செய்வதால் மனம் லேசாகிவிடுவதால், அமைதியான மனநிலையும், மனதிற்கு சந்தோஷமும் ஏற்படுத்தும். எந்த ஒரு விஷயத்தையும் பெரிதுபடுத்தாமல் மன்னிக்க மனதை தயார் செய்யும். எதற்காகவும், யார் மீதும் அவ்வளவு எளிதில் கோபம் வராது.  மனது பக்குவமடையும். சாந்த சொரூபியாகிவிடுவீர்கள்.

மூளைக்கு நன்மை : மனம் தெளிவாவதால் முக்கிய முடிவுகளை  எளிதாக தக்க சமயத்தில் திறன்மிக்க வகையில் எடுக்க முடியும்.  ஞாபக சக்தி அபாரமாகும். மூளை திறன் உயரும். கணக்கு மற்றும் புலனாய்வு மற்றும் பத்திரிகை/கற்பனை சக்தி தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு ஆற்றல் பெருகும்.

இதயத்துக்கும் பயன் ; ஆக்சிஜன் பயன்பாட்டை கட்டுக்குள் வைக்கிறது. இதய துடிப்பு வேகமாக இருந்தால் அதை கட்டுப்படுத்துகிறது. உயர் ரத்த அழுத்த பிரச்னையை குறைக்கிறது. மனது படபடப்பு, பய உணர்வு ஆகியவற்றை குறைப்பதால் இதயத்துக்கு நன்மை அளிக்கிறது. மேலும் இதய நோய்களை கட்டுப்படுத்தும்.

உடல் எடையை குறைய : உடலிற்கும், மனதிற்கும் ஒரே நேரத்தில் புத்துணர்ச்சி கிடைப்பதால், உடல் சுறுசுறுப்படைகிறது. இதனால் உடல் வேகமாக இயங்குகிறது. இதில் கலோரிகள் முன்பைவிட அதிகம் எரிபடுகிறது. மேலும் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் முயற்சிகள் யாவும் கைகொடுக்கும். இதனால் உடல் எடை குறைவதாக ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. ரத்த சுத்திகரிப்பை  அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை அழித்து, உடலில் உள்ள கொழுப்பு சக்தியை குறைக்க உதவும்.
உடல்நோய்களுக்கு மருந்து : ஆஸ்துமா நோயிலிருந்து பூரண குணமடையலாம். சுவார பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தலைவலி பிரச்னையிலிருந்துவிடுபடலாம். கண்பார்வை அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம் குறைவதால் பல உறுப்புகள் சீராக செயல்பட உதவும். ஹார்மோன்கள் சீராக திறம்பட செயலாற்றவும் உதவுகிறது.

விடுதலை : புகைப்பழக்கத்திலிருந்தும், மது பழக்கத்திலிருந்தும் மன கட்டுப்பாடு மூலமாக சில மாதங்களில் விடுபடலாம். மன அழுத்தம் மன நோயிலிருந்து விடுபடலாம். துõக்க பாதிப்பிலிருந்தும், உடல் சோர்விலிருந்தும் விடுபடலாம். மருந்து மாத்திரைகள் மற்றும் தேவையற்ற மருத்துவமனை செலவிலிருந்தும் விடுபடலாம். வயது முதிர்வை தோற்றத்தில் வெளிப்படுவதிலிருந்து விடுபடலாம். வியர்வை பிரச்னையிலிருந்து விடுபடலாம். மொதத்ததில் பல விஷயங்களிலிருந்து தியானம் விடுதலை பெற்றுத்தருகிறது.

மதிப்பும் மரியாதையும் : மனம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுவதால், பேச்சில் கனிவும், கண்ணியமும் பிறக்கும். இதனால் நண்பர்கள் வட்டம்  அதிகரிக்கும், சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பக்குவமாக பேசும் ஆற்றல் உயரும். இது சமூக நலன் கருதி செயல்பட வைத்து, சமூகத்தில் அந்தஸ்து உள்ள மனிதனாக மாற்றும், குடும்பத்திலும் பக்குவப்பட்ட மனிதனாக  பார்க்கப்பட்டு, மதிப்பும் மரியாதையும் உயரும். பெரியோர்களை  மதித்து நடக்கும் உயரிய மனம் உண்டாகும். அனைவருக்கும் பிடித்த மனிதராக உங்களை அடையாளப்படுத்தும் தியானம்.
வெற்றிக்கு வழிகாட்டும் : வெற்றி/தோல்வி இரண்டையும் எப்படி  பாவிக்க வேண்டும் என்ற உயர்ந்த நிலையை மனம் அடையும்.  இதனால் அதை சரியாக கையாளும் ஆற்றலை பெறுவீர்கள். லட்சியங்களை தெளிவாக வரையறை செய்து, எளிதில் அடைந்து, சிறப்பான எதிர்காலத்தை அமைக்க உதவிடும். முடிவெடுக்கும் திறன் உயரும். கடமைகளில் வெற்றியும், நேர்மையான உழைக்கக்கூடிய வகைகளையும், ஆற்றலை திறம்பட வெளிப் படுத்துவதற்கான முறைகளையும் கையாண்டு வெற்றிக்கு வித்திட தியானம் வழிகாட்டும்.