தொப்பையை குறைக்க நிறையா சாப்பிடுங்க..

தலைப்பை பார்த்ததும் ஆச்சரியமா இருந்திருக்குமே.. நிறைய சாப்பிட்டா மேலும்தானே உடம்பு போடும்னு நினைக்கிறீங்க. கரெக்ட்தான். பட் நீங்க என்ன சாப்பிடுறீங்கன்னு பொறுத்தது அது. உடம்பு ஏறுவதற்கு சில உணவுகள் காரணியாக இருக்கும்போது உடம்பு குறைக்க சில பயலுக ஹெல்ப் பண்ணமாட்டாங்களா? யோசிச்சு பாருங்க. அவைகளை அதிகம் தின்றால் தொப்பையை மிஸ்சிங் லிஸ்டுல சேர்த்துடலாம். அத்தகைய உணவுகளை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்




வேர்க்கடலை : கடலையில் கொழுப்புக்களை கரைக்கும் பொருளும், கனிமச்சத்துக்களும் உள்ளன. அள்ளி சாப்பிடலாம், வெயிட் போட வாய்ப்பில்லை.

வெண்ணெய் உடல் எடையை அதிகரிக்கும் என்று நினைக்கிறோம். ஆனால் வேர்க்கடலை அல்லது பாதாமால் செய்யப்பட்ட வெண்ணெயை பிரட்டில் தடவி சாப்பிட்டு வந்தால், அடிக்கடி பசி ஏற்படாது. உடல் எடையும் குறையும்.

காய்கறிகளில் ப்ராக்கோலி, காலிபிளவர், கேல் மற்றும் முட்டைகோஸ் போன்ற பச்சை காய்கறிகளில் அதிக அளவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது, சொல்லப்போனால், வைட்டமின் சி சத்தானது கொழுப்புக்களை கரைக்கக்கூடியது. மேலம் இந்த சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், கொழுப்புக்கள் கரைந்து உடலில் இருந்து வெளியேறிவிடும்.

ஓட்ஸ் :
இது நார்சத்து அதிகம் கொண்டது. ஒரு சிறந்த டயட்உணவு. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஓட்ஸ் அதிகம் சேர்ப்பது சூப்பர் பயன்தரும்.

பூண்டு  ;
இது உடல் வெப்பத்தை அதிகரித்து, உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கொழுப்புக்களை வேகமாகவும் கரைக்கும் திறன் கொண்டது.

முட்டை ;
தினமும் 7 கிராம் புரோட்டீன் நிறைந்த முட்டையை சாப்பிடுவது நல்லது. எனவே காலையில் முட்டையை சாப்பிட வேண்டும். மேலும் முட்டை உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை கரைத்துவிடும்.

கொழுப்புக்களை கரைப்பதில் செலரி ஒரு சிறந்த உணவுப் பொருள். அதிலும் இதில் கலோரிகள் இல்லாததால், உடல் எடை குறைப்பதில் எஸ்ஸ்பெர்ட்

இஞ்சியானது ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, உடல் வெப்பத்தை அதிகரித்து, 20% அதிகமாக உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே இதனை டீ மற்றும் இதர வகைகளில் சாப்பிடுங்க.


க்ரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. மேலும் கொழுப்புக்களை கரைக்கும் பொருள் உள்ளது என்று பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் தினமும் கிரீன் சாயா சாப்பிட்டு, தொப்பையை போயான்னு விரட்டுங்க.

 உடலில் உள்ள தொப்பை குறைப்பதற்கு சிறந்த உணவுகளுள் அவகேடோவும் ஒன்று. இந்த பழத்தில் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதற்கான இரண்டு முக்கியப் பொருட்களான நார்ச்சத்து மற்றும் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன. இதனை சாப்பிட்டால், நிச்சயம் தொப்பையை குறைக்கலாம்னு ஆய்வு ஒன்றிலும் சத்தியம் செய்திருக்காங்க. டிரை பண்ணுங்களேன்.

ஆப்பிளில் உள்ள பெக்டின் எனும் பொருள், உடலுக்கு வேண்டிய கொழுப்புக்களை மட்டும் தங்க வைத்து, மீதமுள்ள கெட்ட கொழுப்புக்களை வெளியேற்றிவிடும். இதனால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வர, தொப்பையும் குறையும்.

பேரிக்காயிலும் ஆப்பிளைப் போன்றே சக்தி நிறைந்துள்ளது. தொப்பைக்கு குட்பை சொல்ல பேரிக்காய் அருமருந்து. ஆனால் பலருக்கும் பேரிக்காய் என்றொரு பழம் இருப்பதே தெரிவதில்லை என்பது வேதனையான விஷயம்.

ஸ்ட்ராபெர்ரி, ராஸ்ப்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி ஆகிய பெர்ரி பழங்களில் சர்க்கரையை மெதுவாக உறிஞ்ச செய்யும் நார்ச்சத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிட அடிக்கடி பசி ஏற்படுவது தடைபட்டு, வைட்டமின் குறைபாடுகளும் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறது.

பீன்ஸ்களில் கருப்பு பீன்ஸ், காராமணி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. பொதுவாக நார்ச்சத்துள்ள உணவுகள், உடலில் கொழுப்பு கரைந்து அடிக்கடி பசி எடுக்காமல் பார்த்துக்கொள்ளும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு மெதுவாக செரிமானமடைவதால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். அதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், நீரிழிவு உள்ளவர்களும் இதை சாப்பிட ஏற்றதாக இருக்கும்

சிவப்பு மிளகாய்
நிறைய ஆய்வுகளில் காரப் பொருளான மிளகாயில் காப்சைசின் அதிகம் இருப்பதால், அவை உடலில் உள்ள கலோரியை கரைத்து, சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இது காரமாக இருப்பதால், அதிகப்படியான உணவையும் சாப்பிடவிடாமல் தடுக்கும். எனவே கார உணவுகளை நன்கு சாப்பிட்டு, பிட்டாக இருங்கள்.
தானிய வகைகளுள் ஒன்றான தினையிலும் 5 கிராம் கொழுப்புக்களை கரைக்கும் நார்ச்சத்தும், 8 கிராம் பசியைக் கட்டுப்படுத்தும் புரோட்டீனும் உள்ளதால், உடலில் தொப்பையானது விரைவில் கரைந்துவிடும்.
எண்ணெய்களில் ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் மற்றும் எள், வால்நட் போன்ற நட்ஸினால் செய்யப்பட்ட எண்ணெய்களை சமையலில் சேர்த்தால், அவை நிச்சயம் உடலை ஆரோக்கியத்துடனும், தொப்பை ஏற்படாமலும் தடுக்கும்.
தினமும் 8-10 டம்ளர் குளிர்ந்த நீரைக் பருகினால், 250-500 கலோரிகள் உடலில் இருந்து கரைந்துவிடும்.