பருவ வயதில் உடலில் ஆன்ட்ரோஜன் எனப்படும் சுரக்க தொடங்கும். சில சமயங்களில் இது அதிகளவில் சுரக்கும்போது பருக்கள் உண்டாகிறது. சருமத்தில் கொழுப்பு சுரப்பிகள் உள்ளது. அவை சீபம் என்ற எண்ணைப்பசை போன்ற ஒரு பொருளை வெளியேற்றுகிறது. இது முடியின் வேரில் தங்கி
சருமத்தை பளபளப்புடன் வைத்திருக்கின்றன. பருவ வயதில் சுரக்கும் அதிகப்படியான ஆன்ட்ரோஜன் இந்த எண்ணைபசையை மிக அதிகமாக சுரக்க வைக்கின்றன. மேலும் பாக்டீரியா கிருமிகள் பருக்களில் தொற்றிக்கொள்ள பருக்கள் பெரிதாக வீங்கி பூதாகரமாகிவிடுகிறது, அதையும் கிள்ளினால் முகமே வீக்கம் பெற்றுவிடும்.
மூலிகை மூலமாக பருக்களை குறைக்கலாம்
வேப்பிலை, துளசி. புதினா பொடிகளை தலா ஒரு ஸ்பூன் முல்தான்மெட்டி இரண்டு ஸபூன்கள் எடுத்து அதை மிதமான சுடுநீரில் கலந்து முகப்பருக்களில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடவும்.
சந்தன கட்டையை பன்னீர் விட்டு இழைத்து, முகத்தில் தடவினால் பருக்களினால் ஏற்பட்ட வடுக்கள் நாளடைவில் மறையும்.
பன்னீர் ரோஜா மொட்டுகளை எடுத்து அது மூழ்கும் அளவு சூடான தண்ணீர் விட்டு ஒரு மணிநேரம் ஊற வைத்து, அந்த நீரை வடிகட்டி முகத்தில் பூசி அரைமணிநேரம் ஊறிய பின் துடைத்து எடுக்க சில நாட்களில் பருக்கள் மறையும்.
சோற்று கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மை கொண்டது. அவற்றில் நடுவில் இருக்கும் பசையை எடுத்து அதில் சம அளவு நீரை கலந்து முகத்தில் தடவினால் நல்ல பயன் கிடைக்கும்.
ஒரு ஸ்பூன் அருகம்புல் பொடியும், குப்பமேனி இலைப்பொடியும் குளிர்ந்த நீரில் கலந்து பருக்களில் போட, பருக்களின் வடு மறையும்.
இரண்டு ஸ்பூன் ஓமவல்லி இலைசாறுடன்ஒரு ஸ்பூன் சிவப்பு சந்தனத்தை கலந்து பருக்கள் மீது தடவினால் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.