தினமும் தண்ணீர் நிறைய குடித்தால் ஆரோக்கியம் சூப்பராக இருக்கும் என்பது மருத்துவ உலகின் அட்வைஸ். ஆனால் நம்மவர்களில் பலர் தாகம் எடுக்கும்போதும்கூட தண்ணீருக்கு பதிலாக பன்னீர் சோடா தொடங்கி, கோலா வரை அருந்துகின்றனர். இதனால் நமக்கு உரிய நீர் சத்து கிடைக்கிறதா என்பது சந்தேகம் தான். மாறாய் வேறுவிதமான விளைவுகளை தான் நாம் பெறுகிறோம். தாகம் எடுத்தால் தான் என்றில்லாமல் தினமும் குறைந்தபட்சம் 5 லிட்டர் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதுமட்டுமின்றி மலச்சிக்கல், ரத்தசுத்திகரிப்பு மற்றும் உடல் இயக்கம் சீராக இருக்க தண்ணீர் அதிகளவு உட்கொள்ள வேண்டும். அல்லது அதிக நீர்சத்து உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஆரோக்கியதை சீராக்கும் நீர்சத்துள்ள உணவுகளை பார்ப்போம் வாங்க..
வெள்ளரிக்காய் :
இவரு தான் நீர்சத்து வள்ளல். சம்மரில் அதிகம் கிடைப்பதால் இவருக்கு மவுசு ஜாஸ்தி. இருந்தாலும் தவறாமல் வாங்கி சாப்பிட்டு, உடல் வறட்சியோடு, மலச்சிக்கலையும் போக்கிடுங்கள்
கேரட்
தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்தால் உடல் வறட்சி நீங்கி, சருமம் பொலிவு பெறுவதோடு, பிபியும் குறையுமாம். இதில் பீட்டா கரோட்டின் அதிகம் இருப்பதோடு, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்களும் அதிமம் உள்ளது. இவை உடலுக்கு மட்டுமன்றி, சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் நல்லது.
முள்ளங்கி
; இதனை அதிகம் சாப்பிட்டால் வயிறு நிறைந்து உடல் எடை குறையும். உடலில் இருந்து வெளியேறிய நீரை மீண்டும் பெறலாம். மேலும் இவை எளிதில் செரிமானமடைவதால், அஜீரணக் கோளாறு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
ஆரஞ்சு
; இதில் வைட்டமின் சி மட்டுமின்றி, நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை உணவில் சேர்த்தால் தாகமே எடுக்காது. சுறுசுறுப்பும் அதிகம் கிடைக்கும்.
திராட்சை
; இதில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. தினமும் உணவில் சேர்த்தால், உடல் வறட்சி நீங்கி, செரிமான மண்டலம் சீராக இயங்கும்.
தக்காளி
; இதில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் லைகோபைன் ஆகியவை அதிகம் இருப்பதோடு, 90% நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் உடல் எடையும் குறையும்.இதனை பச்சையாக சாப்பிட்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டை முழுமையாக பெறுங்கள்.
பீச் ; இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் பீட்டா-கரோட்டினும் உள்ளது. நீர்சத்தும் அதிகம். எனவே இதனையும் மறக்காமல் சாப்பிடுங்கள்.
அன்னாசி
: நார்ச்சத்து அதிகம் உள்ள அன்னாசியில், நீர்ச்சத்தும் அதிகம். கருச்சிதைவு/குறைப்பிரசவம் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதால் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டியதாகும்.
தர்பூசணி ;
நீர்ச்சத்து சூப்பர்ஸ்டார் என்று இதை சொல்லலாம்.
கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும் இதில் வைட்டமின் ஏ, பி, பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் தையமின் சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளது.