சிக் ன்னு உடம்புக்கு சிக்ஸ் யோசனைகள்

வீட்டை சுத்தப்படுத்துங்கள் : வீட்டினை சுத்தப்படுத்துவதை போன்ற அற்புதமான உடற்பயிற்சி கிடையாது. குனிந்து பெருக்குங்கள், தரையை துடையுங்கள், ஒட்டடை அடியுங்கள், தண்ணீர் தொட்டியை கழுவுங்கள், தோட்டத்தை பராமரியுங்கள், மாடிப்படிகளை பெருக்குங்கள். உடல் இளைக்கும். வீடு பளபளக்கும்.




நன்றாக துõங்குங்கள் : முழுமையான 8 மணிநேர துõக்கம் அவசியம். துõக்கம் குறைவு உடற்பருமனை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. குட் ஸ்லீப் குட் பிட்னஸ்.

எக்சர்சைஸ்க்கு எக்ஸ்டிரா பிரண்ட் : உடற்பயிற்சி செல்ல குறிப்பாக ஜிம் போன்ற இடங்களுக்கோ அல்லது வாக்கிங், ஜாக்கிங் செல்லும்போது ஒரு நண்பரையும் இணைத்துக்கொள்ளுங்கள். உடற்பயிற்சியின் களைப்பு தெரியாது. நீங்கள் சோம்பல்படும்போதும் அவர் உங்களை அழைத்து வற்புறுத்துவார்.


நேராக நில்லுங்கள் : எப்போது நின்றாலும் நேராக நில்லுங்கள். அமரும்போதும் கூட முதுகினை வளைக்காமல் நின்று பழகுங்கள். இதனால் உடம்பு குறையாவிட்டாலும், நீங்கள் செய்யும் உடற்பயிற்சிகளால் ஏற்படும் முதுகுவலிகளுக்கு உதவிகரமாக இருக்கும்.

எடை துõக்குதல் : சின்ன சின்ன எடையை துõக்க தயங்காதீர்கள். வீட்டில் கேன்வாட்டர் மாற்றுவது, பொருட்களை துõக்கி நகர்த்துவது போன்வற்றை செய்யுங்கள். ஆனால் முறையாக செய்து பழகுங்கள். தசை பிடிப்பு ஏற்படாத வகையில் செய்யும் அதே நேரத்தில், எடை துõக்குவதால் உடல் எடை இளகி குறையும்.
பாலுறவு கொள்ளுங்கள் :
திருமணமானவர்கள் அடிக்கடி பாலுறவு கொள்வதால்  உடல் எடை குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.