முகம் தான் உடம்பின் வரவேற்பரை. முகம் டல்லாக இருந்தால் உங்களுடன் பழக கூட பலர் தயங்குவர். இதனால் முகத்தை எப்போதும் பிரஷ்ஷாக வைத்துக்கொள்ளவே பலரும் விரும்புகின்றனர். ஆனால் செயற்கையாக தயாரிக்கப்படும் கிரீம்களை பயன்படுத்தி, முகத்தின் அழகை தற்காலிகமாக உயர்த்திக்கொண்டாலும் பலர் சரும பிரச்னைகளை
வரவழைத்துக்கொள்கின்றனர். இயற்கையாக மார்பிள் போன்ற பளபளப்பான முகத்தை பெறுவது எப்படி என்று பார்ப்போம்
ரோஸ் வாட்டர், கிளிசரின், லெமன் சாறு ஆகியவற்றை தலா ஒரு டீஸ்பூன் எடுத்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். பாதாம் எண்ணை ஒரு ஸ்பூன் எல்லாவற்றையும் கலக்கி முகத்தில் பூசினால் முகம் பளபளப்பாககும். கரும்புள்ளிகள் நீங்கும்
தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள் கலந்து முகத்தில் பூசி நன்கு மசாஜ் செய்து வர முகத்தின் கருமை நீங்கும்
அதேப்போல தயிர் அரை ஸ்பூன், லெமன் சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு சாறு, காரட் சாறு, ரோஸ் வாட்டர் ஆகியவை தலா ஒரு ஸ்பூன் மற்றும் ஈஸ்ட் பவுடர் அரை ஸ்பூன் ஆகியவற்றை குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பின் கழுவ, முகம் பளபளக்கும்.
பழுத்த வாழைப்பழத்தை மசித்து ரோஸ் வாட்டரை கலந்து முகத்தில் மசாஜ் செய்யவும், அப்படியே ஒரு மணிநேரம் காயவிட்டு வெதுவெதுப்பான நீரீல் கழுவ முகத்தில் உள்ள பருக்கள் அகன்று சருமம் வென்மையாகும்.
இரவில் கிளிசரினும் தேனும் கலந்து முகசுருக்கங்களில் தடவி, காலையில் கழுவ, முகம் வசீகரமாகும்.
பப்பாளி பழ சாறுடன், காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து பேஸ்ட் செய்து முக சுருக்கங்களின் மேல் தடவ, சுருக்கங்கள் மறையும்.
சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவ, முகத்தில் சுருக்கங்கள் மறையும்
மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் வறண்ட சருமம் புது பொலிவடையும்.
வெள்ளரிக்காயையும், காரட்டையும் மிக்சியில் அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணை வழியில்லாமல் இருக்கும்.
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணை பசை குறையும்
பால் கடலை மாவு, மஞ்சள், சந்தனம் அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவினால்
வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
தோல் வறண்டு சுருக்கமாக இருந்தால் ஆலிவ் ஆயிலை பூசி சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.